8 பிப்., 2010

இனி-மாற்றங்கொள் தமிழா!



ஏ! தமிழா,
* வந்தாரை வாழ வைப்பவன்
என்ற பெயர் இதுவரை
உனக்கு போதும். இனி,
நீ வாழவும் கற்றுகொள்...

* ஈதல் மட்டும் தெரிந்து
நொந்தது போதும். இனி,
இகழ்ச்சிக்கு ஆளாகாமல்
இருக்கவும் தெரிந்துகொள்....

*அன்னியருக்கு அடிமையாய்
பணிசெய்து கிடப்பது போதும்.இனி,
உன் அறிவுக்கண்ணை அகலமாய்
திறக்கவும் கற்றுகொள்...

* மழலை மொழி கேட்டு
மகிழ்ச்சியுற்றது போதும். இனி,
பீரங்கி பற்றியும் தெரிந்துக்கொள்...

* உண்டி கொடுக்க மட்டும்
தெரிந்து இருந்தது போதும். இனி,
நம்மை காக்க அண்டி
கெடுக்கவும் கற்றுக்கொள்....

* நிலாச்சோறு உண்டு நிம்மதி
கொண்டது போதும். இனி,
நிலவில் விளையாடும்
விந்தையும் கற்றுக்கொள்...

* தேச வல்லாண்மை பற்றி
பேசியது போதும். இனி,
தேசத்தை வல்லரசு ஆக்குவது
பற்றியும் அறிந்துகொள்...

* அமுதமாய் அகங்குளிர்ந்து
இருந்தது போதும். இனி,
வேங்கையாய் புறப்படு
வெற்றி பெற வைக்க
வாகைத் தமிழ் உன் கையில்......
- தமிழ்மறவன்

2 கருத்துகள்: